அதிகரிக்கும் கொரோனா தொற்று…! ரூ.30 கோடி நிதி வழங்கிய சன்டிவி நிறுவனம்…!
சன் டிவி நிறுவனம் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்க ரூ 30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நிலையில், உலக நாடுகள் இந்தியாவிற்கு பலவிதங்களில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
ஒவ்வொரு மாநிலங்களிலும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், படுக்கைகள் போன்ற தேவைகள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மக்களுக்கு ,உதவும் வகையில், தனிநபர்களும், பிரபலமான நிறுவனங்களும் கூட உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சன் டிவி நிறுவனம் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்க ரூ 30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இந்த பணம் செலவிட உதவியாக இருக்கும். இந்திய அரசும், மாநில அரசுகளும் ஆரம்பித்திருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட விஷயங்களை தரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து இந்த பணம் செலவிடப்படும். இது தவிர எங்கள் ஊடகங்கள் இந்திய மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sun TV is donating Rs.30 crores to provide relief to those affected by the second wave of the Covid-19 pandemic. pic.twitter.com/APPDcURkib
— Sun TV (@SunTV) May 10, 2021