#BREAKING: எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!
இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நீண்ட நேரமாக நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய 3 மணி நேரமாக நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதனை விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தேர்வு.
— AIADMK (@AIADMKOfficial) May 10, 2021