#Viral:வாரணாசியில் தாகமுள்ள நாய்க்கு தண்ணீர் வழங்கிய காவல் அதிகாரி

Default Image

வாரணாசியில் இரவு நேரக் காவலர் தாகமுள்ள நாய்க்கு தண்ணீர் வழங்கிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவிக்கும் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த அன்பின் செயல்கள் ஒரு சிறந்த நாளைக்கான நம்பிக்கையை தருகிறது. இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில், கடமையில் இருக்கும் காவல்துறையினர் ஒரு நாய்க்கு பைப்பிலிருந்து தண்ணீர் அடித்து அது குடிக்க உதவுகிறார்.

இந்த புகைப்படத்தை  ட்விட்டரில் பகிரப்பட்டு பலரது நெஞ்சங்களையும் தொட்ட இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிகிறது. நற்குணமும் மனிதநேயமும் அந்த செயல்பாட்டில் உள்ளன என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வைரல் இடுகையை பின்னர் ஐ.பி.எஸ் அதிகாரி சுகிர்தி மாதவ் பகிர்ந்து கொண்டார், அவர் பாட்டால் லோக் என்ற வலைத்தொடரின் உரையாடலை மேற்கோள் காட்டி, “ஒரு மனிதன் நாய்களை நேசித்தால், அவன் ஒரு நல்ல மனிதன். நாய்கள் ஒரு மனிதனை நேசித்தால், அவர் ஒரு நல்ல மனிதர்! நம்பமுடியாத பனாரஸ் ..! ”  என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்