குடும்ப அட்டைக்கு ரூ.2000 – திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனே மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர். அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் முதல் தவணையாக ரூ.2,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதமே வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அந்தவகையில், கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம், 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில், வரும் 15 தேதி முதல் அரிசி அட்டைதாரர்கள் ரூ.2,000 ரொக்க பணத்தை ரேஷன் கடைகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.