மேற்கு வங்கத்தில் 43 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் பதவியேற்பு…!

மேற்கு வங்கத்தில், ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதா 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி அவர்கள் மே 5-ஆம் தேதி, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இவர் பெங்காலி மொழியில் 21ஆவது முதல்வராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து, ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி உட்பட மொத்தம் 17 புதிய முகங்கள் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் எளிமையான முறையில்  நடைபெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.