#BREAKING: ஆளுநர் முன்னிலையில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு..!
ஆளுநர் பன்வாரிலால் முன்னிலையில் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார்.
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை காலை தொடங்கவுள்ளது. இந்த கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நாளை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்க உள்ளனர். இதனால் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் முன்னிலையில் கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.
தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். நாளை மறுநாள் முறைப்படி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கு.பிச்சாண்டி முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.