மதுப்பிரியர்கள் உற்சாகம்.., மதுபானங்கள் டோர் டெலிவரி ..!

மதுபானங்களை வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் டெலிவரி வசதியை சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பெகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சத்தீஸ்கரில் முழு ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் வகையில் டெலிவரி வசதியை சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுபானங்களை ஆர்டர் செய்ய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மது தேவையானோர் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே மது வினியோகம் செய்யப்படும்.
ஒருவருக்கு 5 லிட்டர் மதுபானம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மதுபான விலைக்கு ரூ .100 கூடுதல் விநியோக கட்டணம் வசூலிக்கப்படும். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த வசதி கிடைக்கும். மதுகடையின் 15 கி.மீ சுற்றளவில் இந்த வசதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025