தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது வெகுதொலைவில் இல்லை – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது வெகுதொலைவில் இல்லை என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றிருந்தது. இதையடுத்து சென்னை தியாகராயநகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழகத்தில் பாஜக ஆட்சியமைப்பது வெகுதொலைவில் இல்லை, தாமரை மலர்ந்தே தீரும் என்றோம், மலர்ந்துவிட்டது. ஆகையால், தமிழக மக்கள் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.