பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு!!
தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேர்வு.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றிருந்தது. அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக மாநில துணைத்தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக சட்டமன்ற குழு தலைவராக மாநில துணைத்தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான திரு.@NainarBJP அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இதற்கான கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்றது.@kishanreddybjp @CTRavi_BJP @Murugan_TNBJP @blsanthosh @JPNadda @ReddySudhakar21 pic.twitter.com/oeWULHyBwH
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 9, 2021