அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் – கேப்டன் விஜயகாந்த்
ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது.
எனவே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது, கொரோனா நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டாள் அழகர் கல்லூரியை வழங்குவதோடு, இது தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது. (1-3)#COVID19India pic.twitter.com/YJSqXi1CiW
— Vijayakant (@iVijayakant) May 9, 2021