இருவர் முத்தமிட்டு கொள்வதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா?

முத்தமிடுவது சாதாரணமாக மனிதர்களாகிய நாம் அனைவருமே செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் உதட்டில் முத்தமிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முத்தமிடுவது என்பது உலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களுமே செய்யக்கூடிய ஒன்று தான். தங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கு உதட்டில் முத்தமிடுவது வழக்கம். ஆனால் நாம் முத்தமிடுவது தவறல்ல, யாருக்கு முத்தம் இடுகிறோம் என்பதில் தான் கேள்வி எழும்புகிறது. அதாவது நோய் வாய்ப்பட்ட ஒருவரையோ அல்லது பாக்டீரியா தாக்கிய ஒருவரை நாம் முத்தமிடும் போது அதன் விளைவாக நமக்கு பல்வேறு நோய்களும் ஏற்பட காரணமாகிறது. முத்தமிடுவதன் விளைவாக ரத்த அழுத்தம் குறைவது, கலோரிகள் குறைவு, தலைவலி குணமாதல் மற்றும் மூளையில் உள்ள ரசாயனங்கள் அதிகரித்து நமக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது நாம் அறிந்ததுதான்.
ஆனால் இந்த முத்தமிடுவதன் மூலம் நமக்கு சில தீமைகளும் நடக்கும். சில சமயங்களில் உதட்டில் முத்தம் கொடுக்கும் பொழுது சிறிய அளவிலான பாக்டீரியாக்கள் எச்சிலில் இருந்து நமக்கு பரவுவதன் மூலம் குளிர் காய்ச்சல் ஏற்பட காரணமாகிறது. இதன் அறிகுறியாக சளி, தலைவலி மற்றும் தொண்டை புண் ஆகியவை ஏற்படும். அடுத்ததாக வாயை சுற்றிலும் ஏற்படக்கூடிய பனிப்படலம் போன்ற புண் அல்லது உதட்டுப்புண் ஆகியவை ஏற்படலாம். இதுவும் பாக்டீரியாக்கள் காரணமாகத்தான் ஏற்படுகிறது.
அடுத்தது மிக அதிகமான ஆபத்து தரக்கூடிய பாக்டீரியா. இது மூளைக்காய்ச்சல் உருவாக்கக்கூடியது. இது முத்தத்தின் மூலமாக தான் பரவுகிறது என கூறப்படுகிறது. இதன் மூலம் கழுத்து வலி, காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், நமது பற்களின் மேல் பரப்பில் இருக்கக்கூடிய சதைகளிலும் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே நாம் முத்தமிடுவது தவறல்ல நாம் முத்தமிட கூடிய நபர் நமது வாழ்க்கை துணையாக இருந்தாலும் பாதுகாப்புடன் இருப்பதும் சுத்தமாக இருப்பது அவசியம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025