ஸ்மார்ட் (SMaRT) : மின் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலை தொடக்கம்..!
இந்திய விஞ்ஞானிகள், மின் சாதனக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் புதிய திட்டத்தை வடிவமைப்பதில் சாதனை படைத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த வீணா ஷாஜ்வாலா 1986ஆம் ஆண்டில் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றவர். 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கிரீன் ஸ்டீல் என் மறுசுழற்சி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
தற்போது, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் சிட்டினியில் உருவாகியுள்ள ஸ்மார்ட் (SMaRT) என்ற மின் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலையை வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
இங்கு செல்போன், லேப்டாப் போன்ற மின் சாதங்களின் கழிவுகளைக் கொண்டு 3டி பிரிண்டிங் (3D Printing) தொழில்நுட்பத்தில் புதிய பொருட்களைத் தயாரிக்கமுடியும். இது போன்ற தொழிற்சாலை உலகில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.