ஆந்திரப்பிரதேச கல்குவாரியில் குண்டு வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு!

ஆந்திர பிரதேசம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் பாறைகளை வெடிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பல தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பாறைகளை வெடிக்க செய்வதற்காக இந்த குவாரியில் உள்ள தொழிலாளர்கள் வெடி பொருட்களை பயன்படுத்துவது வழக்கமாம். அதுபோல இன்றும் பாறைகளை வெடிக்க செய்வதற்காக கிரானைட் கற்களை துளையிட்டு கொண்டு இருந்த பொழுது வெடிக்க செய்வதற்காக வைத்திருந்த வெடிபொருள் திடீரென தானாக வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள கடப்பா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அன்புராஜ் அவர்கள், இந்த வெடி விபத்து எதிர்பாராமல் நடந்தது எனவும் இந்த சுண்ணாம்பு சுரங்கம் அரசாங்க அனுமதி பெற்றது தான் சுரங்கம் எனவும் தெரிவித்துள்ள அவர், இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திராவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்