1.91 லட்சத்திற்கும் 918 ஸ்பாஞ்ச் பாப் பொம்மைகளை தவறுதலாக ஆர்டர் செய்த 4 வயது சிறுவன்!
அமெரிக்காவில் உள்ள சிறுவன் ஒருவன் அமேசானில் தவறுதலாக 918 ஸ்பான்ச் பாப் பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளான்.
அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவன் ஒருவன் அமேசானின் தற்செயலாக 2618 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.91 லட்சம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள ஸ்பான்ச் பாப் என்னும் கார்டூனில் வரக்கூடிய பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் தனது வீட்டிற்கு வரும்படி செய்யாமல் தனது அத்தை வீட்டிற்கு வருவது போல அட்ரஸை மாற்றி அனுப்பி தவறுதலாக இவ்வளவு பெரிய காரியத்தை செய்துள்ளான். இந்த பொம்மைகள் அனைத்தும் அட்டைப் பெட்டியில் வைத்து அவரது வீட்டிற்கு வந்ததை அடுத்து, அவரது தாயிடம் அவ்வளவு பணம் இல்லாததால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்துள்ளார்.
திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டபொழுது அமேசான் நிறுவனம் இந்த ஆர்டரை திருப்பி எடுக்க மறுத்ததை அடுத்து, அவரது தாயின் தோழி ஒருவர் தனது தோழியின் மகன் இவ்வாறு செய்து விட்டான் எனக் கூறி சமூக வலைதளப் பக்கத்தில் Gofundme எனும் கணக்கை அமைத்துள்ளார். சிறுவனின் இந்த குறும்புத்தனமான செயலுக்கு உதவ பலர் முன் வந்த நிலையில், கிட்டத்தட்ட 14,971 டாலர்கள் இதன் மூலம் திரண்டு உள்ளது. இதனை அடுத்து 2.61 டாலர்கள் அமேசான் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட நிலையில் மற்ற தொகைகள் அந்த சிறுவனின் கல்விச் செலவுக்காக செலவழிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.