நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி…!!
நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகையான கங்கனா ரணாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் அவர் தெரிவித்திருப்பது ” கடந்த சில நாட்களாகவே நான் சோர்வாக உள்ளேன். என் கண்ணில் எரிச்சலாக உள்ளது. இமாசலப் பிரதேசத்துக்குச் செல்வதற்காகப் பரிசோதனை செய்தேன் அப்போது எனக்கு தொற்று தொற்று இருப்பது உறுதியானது. நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram