கொரோனா மையமாக மாறும் உச்சநீதிமன்ற வளாகம்..!

உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையானது வருகின்ற மே 10 முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைப்பட்ட காலத்தில் உச்சநீதிமன்ற வளாகமானது,கொரோனா மையமாக மாற்றப்படவுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பானது 4 லட்சத்தை எட்டியுள்ளது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.மேலும்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான தடுப்பூசி மருந்துகள்,படுக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்,”வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை ஆரம்பமாகிறது.எனினும்,சிறப்பு அமர்வு நீதிபதிகள் கொண்ட விசாரணையானது வழக்கம்போல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும்.

இதனையடுத்து,இதற்கிடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் வளாகங்கள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மையமாக மாற்றிக் கொள்ளப்படும்.இதனால்,இந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையானது ஒரு வாரத்திற்கு முன்னரே ஆரம்பமாகும் எனவும்,இதற்கு தலைமை நீதிபதி தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.