இரண்டு பிள்ளை பெற்ற பாடகிக்கு பாலியல் தொல்லை !!
சினிமா பிரபலங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சொகுசாக வாழக்கூடியவர்கள் என்பது நிறைய மக்களின் எண்ணம். ஆனால் பெண் பிரபலங்களுக்கும் சினிமாவில் என்னென்ன நடக்கிறது என்ற விவரம் இப்போது தான் அதிகம் வெளியாகி கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த பாடகர் அலி ஜாபர் மீது பாடகி மீஷா ஷஃபி அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
என் சக பாடகர் அலி ஜாபர் எனக்கு ஒன்று அல்ல பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது நான் இந்த துறைக்கு வந்த புதிதிலோ அல்லது இளம் பருவத்திலோ நடக்கவில்லை. நான் பிரபலமான பிறகு, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு நடந்துள்ளது என டுவிட்டரில் பெரிய பதிவு செய்துள்ளார்.