எதிர்க்கட்சித் தலைவர் யார்..?.., அதிமுக எம்எல்ஏ கூட்டம் ஒத்திவைப்பு..!

Default Image

திங்கள்கிழமை காலை 09:30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

அதிமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்எல்ஏ கூட்டம் ஒத்திவைப்பு:

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாமல் வரும் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களிடையே விவாதம் ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகள் இடையே 4 மணி நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவும் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

முடிவு எட்டப்படாததால் திங்கள்கிழமை காலை 09:30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் யார்..? அதிமுகவில் இழுபறி:

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்பாக அதிமுக தரப்பில் இழுபறி நீடித்துள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இழுபறி நீடிப்பு. தேர்தலில் செலவு செய்தது யார்..? 234 தொகுதிகளிலும் உழைத்தது யார்..? என ஈபிஎஸ் கேள்வி நீங்கள் செலவு செய்த பணம் கட்சியினுடையது தானே என ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் பதில்

தேர்தல் தோல்விக்கு காரணம் யார்..?

ஈபிஎஸ் எடுத்த முடிவுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என ஓபிஎஸ் தரப்பில்  குற்றச்சாட்டு, கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எப்படி விட்டுக் கொடுப்பது ..? என ஈபிஎஸ் தரப்பில் வாதம். எத்தனை முறை விட்டு தருவது என ஓபிஎஸ்க்கு ஆதரவாக கடம்பூர் ராஜு பேச்சு. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்ததால் தான் தென் மாவட்டங்களில் வெற்றி இழந்தோம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.நினைவிடத்திலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்:

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இருவரும் ஜெ. நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார், ஜெ.நினைவிடத்திலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒபிஎஸ்க்கு  பதவி வழங்காவிட்டால் தீக்குளிக்க தயங்க மாட்டோம் என தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்