உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணி அறிவிப்பு..!!
இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடி காரணமாக ஐபிஎல் 2021 போட்டியானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தானாகவே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்பியுள்ளது.
இதனையடுத்து,ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியானது இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.மேலும், இந்த அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஜூன் 18 அன்று தொடங்கி 22 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஆகியோர் இடம்பெற்றுள்ளன.
மேலும் கே.எல். ராகுல் மற்றும் விருத்திமான் சாஹா உடற்தகுதி அடிப்படையில் முடிவு செய்து எடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
India’s squad: Virat Kohli (C), Ajinkya Rahane (VC), Rohit Sharma, Gill, Mayank, Cheteshwar Pujara, H. Vihari, Rishabh (WK), R. Ashwin, R. Jadeja, Axar Patel, Washington Sundar, Bumrah, Ishant, Shami, Siraj, Shardul, Umesh.
KL Rahul & Saha (WK) subject to fitness clearance.
— BCCI (@BCCI) May 7, 2021
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 முதல் 8வரை நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 12 முதல் 16 வரை, மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 25 முதல் 29 வரை, நான்காவது போட்டி செப்டம்பர் 2 முதல் 6 வரை, ஐந்தாவது போட்டி செப்டம்பர் 10 முதல் 14 வரை நடைபெறவுள்ளது.