விமான நிலையத்தில் இரண்டு பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த நபர்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

Default Image

விமான நிலையத்தில் இரண்டு பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த நபரிடம் புகைப்படத்தை அழிக்க சொல்லி, அறிவுரை கூறி அனுப்பிய பெண்கள். 

இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பல இடங்களில் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இந்த சமூகத்தில், பலரின் பார்வையில், பெண்கள் ஒரு விளம்பர பொருளாக தான் தோன்றுகின்றனர். அந்த வகையில், ஒரு விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் நடந்து செல்கின்றார்கள். அப்பெண்களை நடுத்தர வயதுடைய ஒரு நபர் அவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுக்கிறார்.

இதனைப் பார்த்த அந்த பெண்கள், அந்த நபரிடம் புகைப்படம் எடுத்தது குறித்து கேட்கின்றனர். ஆனால், அவர், அப்படி எடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கிறார். பின் அந்த இடத்தில் உள்ள கேமரா பதிவுகளை அவரிடம் காட்டி கேட்கும்போது,  இதனால் ஒன்றும் இல்லை. அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு அவர் நடக்கத் தொடங்குகிறார்.

சில நிமிடங்கள் கழித்து அவர் நான் அதை எனது மொபைல் இருந்து அகற்றி விடுகிறேன் என்று கூறுகிறார். அப்போது அந்த பெண் அவரிடம், ஐயா பெண்களின் அனுமதியின்றி  பொது இடங்களில் புகைப்படம் எடுப்பது மிகவும் தவறானது. எனவே நீங்கள் அதை ஒரு போதும் செய்யக் கூடாது. நாங்கள் உங்கள் மகள் அல்லது உங்களுடன் தொடர்புடைய ஒருவராக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் தனது செல்லில் உள்ள புகைப்படங்களை நீக்குவதாக கூறுகிறார். இருப்பினும் அந்த இரண்டு பெண்களும் தங்கள் முன்னால் அந்த படங்களை நீக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர். இதனையடுத்து, அவர் அதை கேலரியில் உள்ள புகைப்படங்களை மட்டும் அல்லாது ‘trash bin’ -ல் உள்ள புகைப்படங்களை நீக்குகிறார். இதனையடுத்து, இதுபோன்ற செயல்களை இனி ஒருபோதும் செய்ய வேண்டாம் என  கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்