#Breaking: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.
இதனைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும், மறைந்த அன்பழகன் வீட்டிற்கும் சென்று மலைத்துவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின் தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட திட்டங்களில், முதல்கட்டமாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து விற்பனை செய்ய அதற்கான கோப்பில் கையெழுத்திட்டு அரசாணையும் வெளியிட்டுள்ளார். இது வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கையெழுத்து!!!#DMK #CMSTALIN #MKStalin #MKStalinCabinet #TNGovt pic.twitter.com/wNb0hHgfvK
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 7, 2021