ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஹார்டிக் பாண்ட்யா, பிருத்வி ஷா, மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு…!

Default Image

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஹார்டிக் பாண்ட்யா, பிருத்வி ஷா, மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடி காரணமாக ஐபிஎல் 2021 போட்டியானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தானாகவே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்பியுள்ளது.

இதனையடுத்து,ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியானது இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது.இதில்,இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.மேலும்,முதல் இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூன் 18 அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில்,இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாதுவதற்காக,விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளது.

அதில்,பி.சி.சி.ஐ நிர்வாகம் குறைந்தது நான்கு ஓபனிங் பேட்ஸ்மேன், சுமார் நான்கு முதல் ஐந்து நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்களையும்,எட்டு முதல் ஒன்பது வேகப்பந்து வீச்சாளர்களையும், நான்கு முதல் ஐந்து ஸ்பின்னர்களையும், இரண்டு முதல் மூன்று விக்கெட் கீப்பர்களையும் தேர்வு செய்ய உள்ளது என்று கிரிக்பஸ் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து,மார்ச் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 25 வயதான பிரசித் கிருஷ்ணா,தனது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைப்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசாமல் இருந்த ஹார்டிக் பாண்ட்யா,இப்போட்டிகளில் இடம் பெறுவார் எனவும்,தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் 2021 தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் பிருத்வி ஷா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்ககப்படுகிறது.

இதனையடுத்து,ஜஸ்பிரீத் பும்ரா,முகமது ஷமி,இஷாந்த் சர்மா,புவனேஷ்வர் குமார்,ரவீந்திர ஜடேஜா,விராட் கோலி,அஜிங்க்யா ரஹானே,ரோஹித் சர்மா, சுப்மான் கில்,கே.எல்.ராகுல்,சேதேஸ்வர் புஜாரா,ரிஷாப் பந்த்,வாஷிங்டன் சுந்தர்,ரவீந்திர ஜடேஜா,ஆக்சர் படேல்,ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் இந்தப் அணிகள் இங்கிலாந்துக்கு புறப்படும் என்று அறிக்கைகள் முன்னர் கூறியிருந்தன.ஆனால்,ஒரு சில நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்திருப்பதால்,இங்கிலாந்து அரசாங்கத்திடம் அனுமதி பெறுவதற்கு பி.சி.சி.ஐ முயற்சித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்