அமெரிக்காவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆறாம் வகுப்பு பெண் – 3 பேர் காயம்!
அமெரிக்காவில் உள்ள ஐடோஹா எனும் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள ஐடஹோ எனும் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் படித்து வரக்கூடிய ஆறாம் வகுப்பு சிறுமி தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார். தனது பள்ளி மாணவி மற்றும் வகுப்பு தோழர்கள் மீது இந்த பெண்மணி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் மற்றும் ஒரு பள்ளி ஊழியர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த இரு மாணவர்களுக்கும் ஒரே இரவில் அறுவை சிகிச்சை நடத்தப்படலாம் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதுடன், காலை 9:00 போல இந்த பெண்மணி இந்த சம்பவத்தை நிகழ்த்தி இருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பள்ளி மேலாளர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மாணவியின் பையில் எவ்வாறு துப்பாக்கி வந்தது எனவும், மாணவி நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது எனவும், திடீரென நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து தாங்களும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற ஒரு மோசமான சூழல் இதுவரை தங்கள் பள்ளியில் நிகழ்ந்ததில்லை எனவும், இனி இதற்காக நாங்கள் எங்களை தயார் படுத்திக் கொள்வோம் எனவும் பள்ளி மேலாளர் தெரிவித்துள்ளார்.