மக்களுக்கு உதவ வேண்டும்…! மகளின் திருமணத்தை ஒத்திவைத்த போலீஸ் அதிகாரி…!
மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, மகன் திருமணத்தை ஒத்திவைத்த போலீஸ் அதிகாரி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் ஒருபக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாகவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், மக்களை காக்கும் பணியில், மருத்துவர்கள் மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரிகளும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் டெல்லியை சேர்ந்த போலீஸ் ஏ.எஸ்.ஐ. ராகேஷ் குமார் அவர்கள், டெல்லியில், லோதி சாலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நன் இதுவரை கிட்டத்தட்ட 1,100 பேருக்கு உதவி செய்துள்ளேன். இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். இங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, எனது மகளின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளேன்.’ என தெரிவித்துள்ளார்.