மியான்மரில் இராணுவத்தினரின் சதி…! சேட்டிலைட் டிவி சேனல்களுக்கு தடை…! இணையம் மற்றும் ஊடகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு…!

Default Image

மியான்மரில் செயற்கைகோள் தொலைகாட்சிக்கு தடை. இணையம் மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு. 

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு கலைக்கப்பட்டு, பின் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மியான்மரில் உள்ள ஜனநாயக குரல் பர்மா மற்றும் மிஸ்மா போன்ற தொலைக்காட்சிகளில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதாக கூறி செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் அங்கு ஒளிபரப்பாகும் வெளிநாட்டு  தொலைக்காட்சிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணுவ அரசுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட்டால் ஒரு வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராணுவம், மக்களை மேலும் தனிமைபடுத்துவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சி ஆகும் என்று மனித உரிமைகள் ஆணையம் கண்காணிப்பகத்தின் ஆசிய சட்ட ஆலோசகர் லிண்டா லக்தீர் தெரிவித்துள்ளார். மேலும் இராணுவ ஆட்சிக்குழு உடனடியாக இந்த மூர்க்கத்தனமான உத்தரவை வாபஸ் பெற வேண்டும் மணி உரிமைகள் ஆணையத்தின் அமைப்புகள் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்