அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம்…! மீண்டும், மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்க அரசு….!

Default Image

இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு மீண்டும், மீண்டும் அறிவுறுத்தும் அமெரிக்க அரசு. 

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 3500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா வைரஸோடு இந்தியா போராடி வரும் நிலையில், சில நாடுகள் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளது. அந்த வகையில், அமெரிக்க அரசும் தனது நாட்டு குடிமக்களை இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து எவ்வளவு சீக்கிரமாக கிளம்பு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக கிளம்புங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று (மே – 5) அவசரகால அமெரிக்க அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து வெளியேற அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. மேலும், “இந்தியாவை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்கள் கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று  தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கனவே இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில். இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
amaran ott
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress