சொந்த ஊரால் ஒதுக்கப்பட்ட குடும்பம்…! குடும்பத்தினர் முன்பே துடி துடித்து இறந்த கொரோன நோயாளி…!
நோய் தொற்று காலத்தில், சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மடிந்து போவது மனித உயிர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் தான்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்று காலத்தில், சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மடிந்து போவது மனித உயிர்கள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் தான்.
அந்த வகையில், ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியில், ஆசிரிநாயுடு என்ற கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் தான் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அனால்,அந்த கிராம மக்கள், அவரை ஊருக்கு வெளியே, குடிசையில் தங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், மூச்சு விட முடியாம திணறி உள்ளனர். இதனை பார்த்த கூலித்தொழிலாளியின் மகள், அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே ஆசிரிநாயுடு, துடிதுடித்து, மனைவி மற்றும் பிள்ளையின் கண் முன்பாக உயிரிழந்துள்ளார்.