கேட்ஸ் தம்பதியரின் விவாகரத்து குறித்து மனம் திறந்த மூத்தமகள் ஜெனிஃபர் கேட்ஸ்!

உலகின் பில்லியனர் ஜோடிகளான கேட்ஸ் தம்பதிகள் 27 வருடங்களுக்குப் பிறகு தற்போது விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அவர்கள் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் அவர்கள் தனது இணையதள பக்கத்தில் மனம் திறந்துள்ளார்.
உலகின் பணக்கார ஜோடிகளில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் 27 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்பொழுது விவாகரத்து செய்துகொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 27 வருட திருமண வாழ்க்கைக்கு பின்பதாக மீண்டும் இணைந்து வாழ்வது குறித்த நம்பிக்கை தங்களுக்கு இல்லை என மனப்பூர்வமாக இருவரும் அறிவித்துள்ள நிலையில், தங்கள் நடத்தி வரக்கூடிய நிறுவனத்தை இருவரும் இணைந்து தொடர்ந்து நடத்த போவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவர்களது விவாகரத்து குறித்து அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கேட்ஸ் தம்பதியரின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் தனது இணையதள பக்கத்தில் இது குறித்து மனம் திறந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது முழு குடும்பமும் தற்பொழுது ஒரு சவாலான நேரத்தை கடந்து வருவதாகவும் எப்படி என்னுடைய குடும்பத்திற்காக நான் முறையாக ஆதரிப்பு கொடுப்பது என்பது குறித்து இன்னும் கற்றுக் கொண்டு இருப்பதாகவும், எங்களது குடும்பத்தின் தனிப்பட்ட கொள்கைகளை மக்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் தனது பெற்றோரின் பிரிவு குறித்து தான் எந்த தனிப்பட்ட கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் அவர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025