ஹெச்.ராஜா ,எஸ்.வி.சேகர் பேச்சே சரியில்லை ! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிப்பதை ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் கூறினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டர் பதிவிட்டது குறித்து கேட்டபோது, அதுகுறித்து தெரியாது என்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறினார். ஒரு பெண் ஆளுமையின் கீழ் இருந்த தாங்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கக் கூடாதா என செய்தியாளர் கேட்டுமுடிப்பதற்குள் சந்திப்பை முடித்துக் கொண்டு தம்பிதுரை புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.