கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்ட வாய்ப்பு!
வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என தகவல். இதையடுத்து, மீனவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் ஞாயிறு வரை கடல் சீற்றம் வர வாய்ப்புள்ளது.
இதனால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும் என்று வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் யாரும் மேற்கண்ட நாட்களில் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியா கடல்சார் தகவல் மையத்திலிருந்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் பேட்டி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.