திமுக சட்டமன்ற குழு தலைவராக முக ஸ்டாலின் தேர்வு… வரும் 7ம் தேதி முதல்வராக பதவியேற்பு!!
இன்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதில், துரைமுருகன், டிஆர் பாலு, கேஎன் நேரு, பொன்முடி, எவே வேலு, ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக எம்எல்ஏக்கள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் என 133 பேர் கலந்துகொண்டனர்.
சட்டமன்ற குழு தலைவராக தேர்வான நிலையில், நாளை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் முக ஸ்டாலின். வரும் 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.