தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள்.., டிடிவி தினகரன் ட்விட் ..!
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் திமுகவை சேர்ந்த இருவர் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர். பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என கூறியபடி சென்றனர்.
அம்மா உணவகத்தை திமுகவை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.
சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 4, 2021
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும். (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 4, 2021