இந்தியாவில் ஒரே நாளில் 3.57 லட்சம் பேருக்கு கொரோனா.. 3,499 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் கடந்த 24 மணி நேரத்தில் 3,449 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் பலி எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் 3,20,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,66,13,292 பேர் குணமடைந்து உள்ளனர். 34.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 81.91%, உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09%, தற்போது சிகிச்சை பெறுவோரின் விகிதம் 16.99% ஆக இருக்கிறது.
மேலும் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 16,63,742 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025