#BREAKING: NEET PG தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!

Default Image

நீட் பிஜி தேர்வை மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் பிஜி தேர்வு அதிகரித்து வரும் கொரோனாவை மனதில் வைத்து, நீட் பிஜி தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்திருந்தார். இப்போது மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று மற்றும் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். இந்நிலையில், நீட் பிஜி தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பு தேர்வு நடத்தப்படாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கு ஒரு மதத்திற்கு முன் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை பயன்படுத்தும் வகையில் நீட் பிஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரனோ சிகிச்சை பணியில் 100 நாள்கள் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். தொலைபேசியில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும், லேசான அறிகுறி உள்ள நோயாளிகளை கண்காணிக்கவும் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு மாணவர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

NEET PG தேர்வு முன்னதாக ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்