குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல்..!

Default Image

தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால், திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன்காரணமாக வரும் 7-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

  • தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை விட 137 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி.
  • மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி.
  • தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி.
  • மேட்டூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாளை விட 656 வாக்குகள் அதிகமாக பெற்று பாமக வேட்பாளர் சதாசிவம் வெற்றி.
  • காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி.
  • கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட 794 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர்  அசோக் குமார் வெற்றி.
  • விருதாச்சலம் தொகுதியில் பாமக வேட்பாளர் கார்த்திகேயனை விட 862 வாக்குக்கள் அதிகமாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி.
  •  நெய்வேலி தொகுதியில் பாமக வேட்பாளர் ஜெகனை விட 977 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் சுபா ராஜேந்திரன் வெற்றி .
  •  ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணியை விட 1091 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் தேவராஜி வெற்றி.
  • கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் குறிஞ்சிபிரபாகரனைவிட 1095 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் தாமோதரன் வெற்றி.
  • அந்தியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சண்முகவேலை விட 1275 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் வெற்றி.
  •  திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்துவை விட 1382 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி.
  •  தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை விட 1393 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி.
  •  உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சோமசுந்திரத்தை விட 1622 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் சுந்தர் வெற்றி.
  •  பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் வரதராஜனைவிட 1725 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி.
  •  கோவை தெற்க்கு தொகுதியில் மநீம வேட்பாளர் கமல்ஹாசனை விட 1728 வக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி.
  • கூடலூர் தொகுதியில்  திமுக வேட்பாளர் காசிலிங்கத்தை விட 1945 வாக்குகள் அதிகமாக அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் வெற்றி.
  •  திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் ஆறுமுகத்தை விட 1947 வாக்குகள் அதிகமாக பெற்று விசிக வேட்பாளர் பாலாஜி வெற்றி.
  •  ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை விட 1952 வாக்குகள்அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் மதிவேந்தன் வெற்றி.
  •  மயிலம் தொகுதியில் திமுக வேட்பாளர் மாசிலாமணியை விட 2230 வாக்குகள் அதிகமாக பெற்று பாமக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்