கர்நாடக மாநில அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலத்திலுள்ள சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் அனுமதி கிடைக்காததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதிலும் தலைவிரித்தாடி வரும் நிலையில், நாளுக்கு நாள் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா, மாவட்ட கலெக்டர் அவர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக நாளை அமைச்சரவையை கூட்டி விவாதிக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.