தமிழகத்திற்கான விடியல் தொடங்கியுள்ளது – காங்கிரஸ்
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு இருக்கிறது என கேஎஸ் அழகிரி கருத்து.
தமிழகத்திற்கான விடியல் தொடங்கியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முக ஸ்டாலின் தலைமையில் தமிழகம் தலைநிமிர்ந்து பீடுநடை போடும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.