நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…! கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்….!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற திரிணாமுல் கட்சியினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ ’பிரையன், முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் அதின் கோஷ் ஆகியோர் தலைமை நிர்வாக அதிகாரி அரிஸ் அப்தாப்பை சந்தித்து வாக்குகளை மறுபரிசீலனை செய்யக் கோரி ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர்.
அந்த கடிதத்தில், நந்திகிராமில் வாக்குகளை எண்ணும் போது சில ‘போலித்தனமான’ மற்றும் ‘சட்டவிரோத’ விஷயங்கள் நிகழ்ந்ததாக ஆளும் கட்சி குற்றம் சாட்டியுள்ளனர். நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற திரிணாமுல் கட்சியினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)