அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன்!
அமைச்சர் செங்கோட்டையன் ,தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இனி எந்த தேர்வினை கொண்டு வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்களை தயார் படுத்தி வருவதாக கூறினார்.
இதனிடையே, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மே மாதம் இறுதிக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு தொடக்கப் பள்ளிகளை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக ஓராண்டுக்குள் கட்டமைப்புகள் சீரமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.