டெல்லியில் இரண்டாவது நாளாக 400 இறப்புகள்..! தொற்றுப்பரவல் 30% ஆக குறைந்துள்ளது..!

கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 20,394 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.  இதனால், தேசிய தலைநகரமான டெல்லியில் கோவிட்-19 பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16,966 ஐ எட்டியுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 407 இறப்புகள் பதிவாகியுள்ளன.  மேலும்,டெல்லி அரசின் சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 71,997 கோவிட்-19 சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்படி, டெல்லியில் 11,94,946 பேருக்கு இதுவரை தொற்று பரவியுள்ளது.  இதில் 10,85,690 பேர் குணமடைந்தவர்கள் மற்றும் வெளியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், 92,290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவற்றில் 50,742 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்