#BREAKING: முதல்வராக 7-ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்..!

Default Image

திமுக  சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த நிலையில் வரும் 7-ஆம் தேதி ஸ்டாலின்  பதவியேற்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியை 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், திமுக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த நிலையில் வரும் 7-ஆம் தேதி ஸ்டாலின்  பதவியேற்கிறார்.

நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் முறைப்படி ஸ்டாலின் தேர்வு செய்யப்படுகிறார். பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என நேற்று இரவு ஸ்டாலின் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்