மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து…!
மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்வீட்டர் பக்கத்தில், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Good wishes and congratulations @mkstalin on your success in the Assembly election in Tamil Nadu. Wishing you and @arivalayam a good tenure in the service of the people.
திரு. @mkstalin அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்— Nirmala Sitharaman (@nsitharaman) May 2, 2021