திருமங்கலம்:ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

Default Image

திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

அதில்,தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 153  தொகுதிகளிலும்,அதிமுக 80 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில்,திருமங்கலம் தொகுதி செங்கப்பட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 132 என்ற எண் கொண்ட மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான 760 வாக்குகள் எண்ணப்பட்டு இருந்த நிலையில்,மற்றொரு இயந்திரத்திலும் 132 என்ற எண் இருந்ததால்,வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இதுபோன்ற சர்ச்சைகள் இன்று காலை முதல் சில வாக்கு எண்ணும் மையங்களில் நடந்துள்ளது.

மேலும்,திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட 661 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார் என்பது குறிபிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்