உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜனுக்காக மரத்தின் கீழ் முகாமிட்டுள்ள மக்கள்!
உத்தரபிரதேச மாநிலத்தில், மருத்துவமனையில் உதவி கிடைக்காத நிலையில் பீப்பல் மரத்தின் கீழ் ஒரு குடும்பத்தினர் முகாமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழந்து கொண்டு தான் இருக்கின்றனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள தில்ஹாரில் எனுமிடத்தில் உள்ள பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்றாலும் அவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவர்கள் குடும்பத்துடன் பீப்பல் மரத்தின் கீழ் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள பாஜக எம்.எல்.ஏ ரோஷன் வர்மா என்பவர் அவர்களை மருத்துவமனைக்கு மாற்றுமாறு தெரிவித்துள்ளார்.