தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை..!திமுக வேட்பாளர் பின்னடைவு..!
தாராபுரம் தனித் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன்,தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவு சந்தித்துள்ளார்.
தமிழகம்,புதுச்சேரி,கேரளா,மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
தமிழகத்தில்,முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின்னர் காலை 8.30 மணியிலிருந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன்,வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் 797 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வகிக்கிறார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவு சந்தித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 4,218 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.திமுக வேட்பாளரான கயல்விழி செல்வராஜ் 3,421 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.