தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம்!
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தினமும் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருக்கும் நிலையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து வரும் இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி இன்றி மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது. எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் ஜாம் நகரில் உள்ள தனது ஆலையில் இருந்து பல மாநிலங்களுக்கு தங்களால் மடிந்த அளவுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவி வருகிறார்.
ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை 15 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இலவசமாக வழங்கியுள்ளது, கிட்டத்தட்ட 15 லட்சம் நோயாளிகளுக்கு இதுவரை உதவியுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தங்கள் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு நாளும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜனை கொண்டு செல்வதற்காக 24 ஐஎஸ்ஓ கொள்கலனும் விமானத்தில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.