#ElectionBreaking: திங்கள்கிழமை பதவியேற்பு விழா..!கேரள முதல்வர் பினராயி உத்தரவு..!
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்,திங்கள்கிழமை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.இந்நிலையில்,கேரளா மாநிலத்தின் ஆளும் இடதுசாரி கட்சியானது அதிக வாக்குகள் பெற்று ஆட்சியைப் பிடித்தால்,அதற்கு மறுநாள் திங்கள்கிழமை உடனடியாக பதிவியேற்பு விழாவை நடத்த வேண்டும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
ஏனெனில்,கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால்,கேரளத்தில் உடனடியாக அரசுப் பொறுப்பேற்றுக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்பதவியேற்பு விழாவினை விரைந்து நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முதல்வர் பதவியேற்புக்கான விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.இதில் முதல்வருடன் 3 அல்லது 4 மூத்த அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ளும் வகையில் விழாவுக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் இத்தகைய உத்தரவின்மூலம், இடதுசாரிகள் கூட்டணி மீண்டும் கேரளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.அதுமட்டுமல்லாமல்,இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் இடதுசாரி கூட்டணி கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.