கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ சேவை செய்யும் ஆசிரியர்!

மும்பையில் கொரோனா நோயாளிகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்து சென்று சேவை செய்யக் கடிய ஆசிரியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே செல்லும் நிலையில், மக்கள் பலர் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆம்புலன்ஸ் வசதி இல்லாமலும் உயிர் இழந்து விடுகின்றனர். ஓரளவு காப்பாற்றக் கூடிய சூழ்நிலையில் இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் பலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஆசிரியரான  தத்தாரேயா சாவந்த் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து பகுதி நேரமாக நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு உதவி வருகிறாராம்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நோயாளிகளை ஏற்றுவதற்கு அஞ்சி அவர்களைப் புறக்கணித்து வரும் நிலையில், பள்ளி ஆசிரியரான சாவந்த் தற்போது துணிச்சலாக களமிறங்கி நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார். மேலும் இவர் ஆட்டோவில் நோயாளிகளை ஏற்றிச் செல்வது மட்டும் அல்லாமல் இந்த நோயாளிகளுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. தனக்கு பாதுகாப்பாக ஒரு உடை அணிந்து கொண்டு செயல்படக் கூடிய இவர், கொரோனா தொற்று இருக்கும் வரை தான் இந்த சேவையை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியரின் சேவைக்கு தற்பொழுது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
Rebekal