18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி..!தயார் நிலையில் உள்ள அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனைகள்…!

Default Image

அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் போன்ற தனியார் மருத்துவமனைகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எனவே,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.
மேலும்,மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.இக்காரணத்தினால்,இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

 எனினும், நாட்டில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில்,தனியார் மருத்துவமனைகளான அப்பல்லோ, மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மே 1 முதல் 18 முதல் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

மேலும்,இதற்காக சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்தும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,மேக்ஸ் மருத்துவமனை மற்றும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனமும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசிகளை செலுத்த தயாராகி வருவதாகக் தெரிவித்துள்ளன.

மேலும்,ஒரு டோஸுக்கு ரூ.1250 கட்டணமாக பெறப்படும் என்றும்,இது தடுப்பூசி மற்றும் நிர்வாகக் கட்டணங்களை உள்ளடக்கியது என்றும் இம்மருத்துவமனைகள் கூறியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்