தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC) முக்கிய அறிவிப்பு…!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிகளுக்கான நேர்காணல் தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிகளுக்கான நேர்காணலானது வருகின்ற ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து,டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் கூறுகையில்,”தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் 2013 முதல் 2018 வரையுள்ள ஆண்டுகளுக்கான தமிழ்நாடு போக்குவரத்தின் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கடந்த 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
இதில் 1,328 பேர் கலந்துகொண்டனர்.தேர்வில் கலந்துகொண்டவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையில் நேர்காணலானது வருகின்ற ஜூன் மாதம் 8ஆ ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் தற்காலிகமாக 226 பேர் கலந்துக்கொள்ள உள்ளனர்.மேலும்,தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது”,என்று கூறினார்.